நீங்கள் வேலை செய்யும் இடங்களில் இந்த 6 வார்த்தைகளை மட்டும் தெரியாமல் கூட பயன்படுத்தி விடாதீர்கள்!

Published by
லீனா

நம்மில் இன்று ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து இடங்களிலேயும் வேலை செய்து வருகிறோம். நாம் எந்த வேளைக்கு சென்றாலும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்படுகிறது.
ஆனால், நாம் எந்த இடத்தில் எவ்வளவு திறமையாக வேலை செய்தாலும், சில பொதுவான செயல்களை பயன்படுத்தாத பட்சத்தில், நம் மீதான மதிப்பு குறைந்து விடுகிறது. பொதுவாக நாம் வேலை செய்யும் இடங்களில், இந்த 6 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது. அது என்னென்ன வார்த்தைகள் என்பது பற்றி பார்ப்போம்.

இது முடியாது

பொதுவாகவே நாம்மிடையே மிகவும் பழக்கமான பழமொழி தான் ‘முடியாது என்பது முட்டாளின் தத்துவம்’ என்ற பழமொழி. நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு திட்டத்தை தீட்டும் போது, இது என்னால் முடியாது அல்லது இதை செய்வது கடினம் என்று கூற கூடாது.

அந்த திட்டம் சற்று கடினமாகவே காணப்பட்டாலும், முடியாது என்று சொல்லாமல், இந்த திட்டத்தை நம்முடைய அலுவலக சூழலுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுத்தலாம் என திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இது என்னுடைய வேலை அல்ல

ஒரு நிறுவனத்தில் அல்லது அலுவலகத்தில் சில காரணங்களால் ஒரு தனிப்பட்ட நபராலோ அல்லது ஒரு குழுவினஆராலோ குறிப்பிட்ட ஒரு வேலையை செய்ய முடியாத பட்சத்தில், அந்த வேலையை மற்றவரிடம் பகிர்ந்து கொடுப்பதுண்டு.
அவ்வாறு உங்களிடம் ஒரு வேலையை கொடுக்கும் போது, இது என்னுடைய வேலை அல்ல, இந்த வேலை எனக்கு தெரியாது என மறுத்து பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வேலை உங்களுக்கு தெரியவில்லை என்றாலும், இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அந்த வேலையை கற்றுக் கொள்ள பழகுங்கள். இவ்வாறு செய்யும், நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இது சிறப்பாக இல்லை

பொதுவாக அணியாக வேலை செய்து ஒரு திட்டத்தை செய்து முடித்து அறிக்கையாக அளிக்கும் பொது, இது சிறப்பாக இல்லை, இதில் இந்த விடயம் கூறப்படவில்லை என அவர்களை குறை சொல்லாமல், அப்படி அதில் குறை இருந்தால் அதனை அவர்களுக்கு பரிந்துரையாக அளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது, அவர்கள் தங்களது குறைகளை திருத்திக் கொளவதற்கு ஏதுவாக இருப்பதுடன், இந்த பண்பு உங்களிடம் உள்ள சிறந்த தலைமை பண்பையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கும்.

இல்லை என்ற துவக்கம்

நீங்கள் குழுவாக உரையாடும் போதோ அல்லது தனிப்பட்ட உரையாடலின் போதோ ஒரு திட்டத்தை கூறும் போது, இல்லை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று, இல்லை என்ற துவக்கத்துடன் கூறாமல், இல்லை என்ற வார்த்தையை தவிர்த்து, இப்படி செய்வது சிராப்பாக அமையும் என்று கூறினால், அந்த காரியத்தில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படாது.

நாம் இப்படி செய்வதில்லை

நமது அலுவலகங்களில், ஒருவர் புதியதாக ஒரு காரியத்தை செய்யும் போது, அதனை நன்கு கவனிக்க கற்று கொள்ளுங்கள். அப்படியில்லாமல், நாம் இப்படி செய்வதில்லை என்று கூறி புதிய காரியங்கள் தோன்றுவதை தடுக்காதீர்கள். ஒவ்வொரு புதிய காரியங்களும், ஒவ்வொரு நபரால் துவக்கப்பட்டது தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

சரியில்லை (அ) பிடிக்கவில்லை

நம்மில் யாருக்கும் தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. நாம் யாருமே நம்மோடு இணைந்து பணிபுரிபவர்களை இவர் சரியில்லை என்று தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி விட்டு அங்கேயே பணிபுரிய கூடாது. அவ்வாறு பணிபுரியும் போது, இவர் விருப்பம் இல்லாமல் வேலை செய்கிறார் என்ற எண்ணத்தை அங்குள்ளவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும்.

Published by
லீனா

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

6 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

7 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

9 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

10 hours ago