மறந்து கூட இதை அதிகமா சாப்பிட்டுறாதீங்க…!
சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அதிகமாக சீரகத்தில் பல நன்மைகள் உள்ளது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சீரகத்தில், எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தீமைகளும் உள்ளது. தற்போது இந்த பதிவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே காரமான உணவுகள் அனைத்துமே சீரகத்தை பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுவதில்லை. ஏனென்றால் சீரகத்தில் ஜீரண சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை உள்ளது. மேலும் நச்சுத்தன்மையை வெளியேற்றி வாயு பிரச்சனையை குறைகிறது. பொதுவாகவே அதிகமானோர் சீரகத் தண்ணீர் அதிகமாக குடிப்பதுண்டு. ஆனால், இது தவறல்ல. ஆனால் உடல் நோயை முன்வைத்து சீரகத் தண்ணீர் குடிப்பது தவறான ஒன்றாகும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவ்வாறு செய்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது உண்டு. அதிகமாக அசிடிட்டி உள்ளவர்கள் சீரகத்தை சாப்பிட்டால் இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே அளவோடு பயன்படுத்துவது நல்லது. அடிக்கடி சீரகம் சாப்பிடுபவர்கள், சீரகத்தை சாதாரணமாகவே வைத்து சாப்பிடுபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உள்ள எண்ணெய் மிக எளிதில் ஆவியாகும். எனவே கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் சீரகத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே சீரகம் அதிகமாக சாப்பிடும் போது குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். மாதவிடாய் காலங்களில் அதிக அளவு சீரகத்தை எடுத்துக் கொண்டால், அதிக அளவு இரத்தப் போக்கை ஏற்படுத்தும்.
எனவே இந்த சமயத்தில் சீரகத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆனால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துள்ளவர்கள், சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சீரகத்தை அளவோடு சாப்பிடும் போது, நமது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு நமது ஆயுளும் நீடிக்கும்.