“அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்”.! முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

Default Image
  • அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
  • சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது.

இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த மருந்தையே சாப்பிடுகிறார்கள் எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலும் சில மாத்திரைகளை பணியில் இருக்கும் மருத்துவர்கள் கொடுக்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோன்ற காரணங்களால் முதியவர்கள் பலரும் தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்பதோடு, இதற்காக அதிக தொகையை செலவிடுகிறார்கள் எனவும், ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் முதியவர்கள் சராசரியாக தினமும் 8 மாத்திரைகளை சாப்பிடுவதாகவும், பலரும் வலி மற்றும் பல் வேறு நோய்களுக்காக தினமும் குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 15 மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என்று தெரிவித்தனர். இதனிடையே மருத்துவர் கூறுகையில், ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டால் அது நோய் எதிர்வினைகளை ஏற்படுத்துவதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்