ரசிகர்களாக இருக்காதீர்கள்…! அரசியல்வாதிகளாக மாறுங்கள்…! – சரத்குமார்

பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், ரசிகர்கள் என்பது ரசிப்பதற்கு மட்டும்தான் அரசியல்வாதிகளாக மாறுங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டம் வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய சரத்குமார், புரட்சி செய்த வேலூரிலிருந்து முதல் ஆலோசனை கூட்டத்தை தொடங்குகிறோம். மக்களோடு மக்களாக 1996 ஆம் ஆண்டிலிருந்து பயணித்து வருகிறோம். 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. சாதி, மதம் கடந்து சமத்துவம் இருந்தால் மட்டும்தான் ஒன்றாக வாழ முடியும் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க வேண்டுமென்றால் உழைப்பு உறுதி நம்பிக்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பணத்தை கொடுத்தால் வாங்காதீர்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும், ரசிகர்கள் என்பது ரசிப்பதற்கு மட்டும்தான் அரசியல்வாதிகளாக மாறுங்கள். அப்போதுதான் மக்களுக்கு உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025