தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டுட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட ட்வீட்டர் பக்கமான @realtonaldtrump பக்கத்தில் இருந்து சில ட்வீட்டுகள் செய்திருந்தார். இந்த ட்வீட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால், அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிமுறைகளை மீறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தை ட்வீட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது.
டொனால்ட் டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.இதனால் முதலில் 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பின்பு காலவரையின்றி தடை செய்ய வாய்ப்புள்ளது என பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.
இந்நிலையில்,தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை பதிவிட்டதால், அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம் @realtonaldtrump என்ற பக்கத்தில் வரும் ட்விட்கள் வன்முறையை மேலும் தூண்டும் விதமாக உள்ள அபாயத்தின் காரணமாக கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது என்பதையும் பல ஆண்டுகளுக்குப் முன் தெளிவுபடுத்தினோம். எங்கள் கொள்கைகள் மற்றும் அவற்றை அமல்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து வெளிப்படையாக இருப்போம் என்று ட்விட்டர் விளக்கமளித்துள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…