Donald Trump [image source : Reuters]
குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதுபோன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்…மேலும் ஒரு வேட்பாளர் விலகல்…!
இதற்காக நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் இருந்து விலகினார். பின்னர், தேர்தல் பிரச்சாரம் ஈடுபடாததால் ரான் டி சான்டிஸும் விலகுவதாக அறிவித்தார். இறுதியாக, டொனால்டு டிரம்ப் மற்றும் நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவியது.
இந்த நிலையில், நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்முலம் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிட இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இது முதல் வெற்றியாக அமைந்துள்ளது. அதேசமயத்தில், அவரை எதிர்த்து அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…