அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கொரோனா நோய்த்தொற்றுக்கு உருவாக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி அங்கு 43,68,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.1,50,199 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே தேசிய சுகாதார நிறுவனம் (என்ஐஎச்)வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க விஞ்ஞானிகள் பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியுள்ளனர்.கொரோனா இல்லாத சுமார் 30,000 தன்னார்வலர்களின் பங்கேற்புடன் பல அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி தளங்களில் இந்த சோதனையை நடத்த தேசிய சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,கொரோனா சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு வாரங்களில் மிகச் சிறந்த விஷயங்களை நாங்கள் கூறுவோம்.அது குறித்து சில அறிவிப்புகளை நாங்கள் பெற்றவுடன் அறிவிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025