காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் டொனால்டு டிரம்ப்!!!
- இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் ஜம்மு காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என டொனால்டு டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீட்டர் தூரம் வரை அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா தளங்கள் , போக்குவரத்து நிலையங்கள் , வணிக வளாகங்கள் , அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது.
புல்வமா தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவியது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஓரளவு குறைந்துள்ளது.