நண்பர் மோடிக்கு நன்றி.! அமெரிக்கா இந்தியாவை விரும்புகிறது.! – டொனால்டு ட்ரம்ப் ட்வீட்.!
அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு, நன்றி தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
1776 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி அமெரிக்காவில் 244-ஆவது சுதந்திர தினமானது கொண்டாடபட்டது.
அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்க சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி. அமெரிக்கா இந்தியாவை விரும்புகிறது. ‘ என பதிவிட்டுள்ளார்.
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020