அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டம்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை உயர்த்தும் முடிவைத் திரும்பப் பெறப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் வகையில் உருக்கு இறக்குமதிக்கு 25விழுக்காடும், அலுமினியம் இறக்குமதிக்கு 10விழுக்காடும் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு அவர் சார்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவர் பால் ரியான், அதிபரின் இந்த முடிவால் வணிகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதை அதிபரிடம் சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள், இறக்குமதி வரி அறிவிப்புத் திரும்பப் பெறப்படுமா எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த டொனால்டு டிரம்ப், எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.