டான் அந்த காட்சி எப்படியா எடுத்தீங்க.?! வீடியோவை வெளியிட்டு மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த சூரி – சிவகார்த்திகேயன்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரி பின்னணியில் தந்தை -மகன் பாச கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தை பார்த்து எமோஷனல் ஆகாத ரசிகர்கள் இல்லவே இல்லை என்கிற அளவிற்கு ஒரு எமோஷனல் காட்சி இடம்பெற்றிருந்தது. படம் ரசிகர்களுக்கு மத்தியில பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறலாம்.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகர் சூரி அப்பா என்று புரியாத மொழியில் பேசும் நகைச்சுவை காட்சி ரசிகர்களை பயங்கரமாக சிரிக்க வைத்தது என்றே கூறலாம். இந்த காட்சியை படமாக்கிய மேக்கிங் வீடியோவை தனது சமூக வலைத்தளங்களில் சூரி வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ ரசிகர்களை சிரிக்க வைப்பது போல இருப்பதால், இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியை எப்படியா எடுத்தீங்க..? என கேட்டு வருகிறார்கள்.
Making of #IdakaOoAmcha from #Don ????@Siva_Kartikeyan @Dir_Cibi @SKProdOffl @LycaProductions pic.twitter.com/kRSM4rStsB
— Actor Soori (@sooriofficial) June 27, 2022