பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும்.
இந்த நிலையில், குறைந்த பவரில் டோமினார் பைக்குகளை வழங்க பஜாஜ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனையடுத்து இந்த பைக், 250 ரக சிசியில் டோமினார் 250 என்ற பெயரில் பிஎஸ்-6 என்ஜினுடன் வெளிவரவுள்ளது.
இந்த பைக்கின் என்ஜினை பொறுத்தளவில், கேடிஎம் ட்யூக் 250யில் உள்ள என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜின், 249 சிசி சிங்கள் சிலிண்டர் என்ஜினில் அதிகபட்சமாக 30 BHP பவரையும், 24 NM டார்கை 6500 ரெவால்யூஷனில் வெளியிடும். ஆனால் பஜாஜை பொறுத்தளவில், இதைவிட சற்று குறைவான திறனை பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பைக்கின் விலையை குறைக்கும் நோக்கத்துடன், ஸ்விங் ஆர்ம் போன்ற ப்ரீமியம் உதிரிபாகங்களில் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் டயர் அளவு, டோமினார் 400ஐ விட சிறிதாக இருக்கும். டோமினார் 400ல் அப்ஸைட் டவுன் போர்க்குகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 250யில் டெலெஸ்கோபிக் போர்க்குகள் இடம்பெறுகின்றன. மேலும், இதில் டோமினார் 400ல் இடம்பெற்ற அதே ஹெட்லம்ப்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் அடங்கும்.
இந்த பைக், இந்த மாதம் வெளிவரும் எனவும், ஏப்ரல் மாதம் இதன் டெலிவரி தொடங்கிவிடும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை, 1.45 லட்சம் முதல் 1.60 லட்சம் வரை வரும் எனவும் கூறி வருகின்றனர். லாங் ரைடை விரும்போவோருக்கு டோமினார் 400ஐ போலவே இந்த பைக்கும் சிறப்பாக அமையும்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…