பட்டையை கிளப்ப காத்திருக்கும் பஜாஜ்… அறிமுகம் செய்தது டாமினர் 250…

இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இத்துடன் டூயல் டோன் பேனல்கள்,ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர்,லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர்,23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் .புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டாமினர் 250 மாடலில் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க்,
ட்வின் பாரெல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.இது டாமினர் 400 மாடலை போன்ற சவுகரியத்தை வழங்குகிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் கேன்யான் ரெட் மற்றும் வைன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.இந்த புதிய பஜாஜ் டாமினர் 250 மாடல் விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025