ஈறு வலி பிரச்சனையில் இருந்து விடுபட இதை செய்தல் போதும்!
- தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் .
- நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும்.
பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது .அதற்கு முக்கிய காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு , புகைபிடித்தல் , தவறான முறையில் பல்லு கட்டுதல் , தவறான முறையில் பல் துவக்குதல் போன்ற காரணங்களாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.
எனவே அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது. அடிக்கடி மருந்துகள் வாங்கி பல் வீக்கத்திற்கு சரி செய்வதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவற்றை சரிசெய்யலாம்.
- தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும் .
- எலுமிச்சை சாற்றை , தண்ணீருடன் கலந்து பல் துலக்கிய பின் அந்த தண்ணீரை கொண்டு வாயை கழுவவும்,அப்படி செய்தல் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகளை குறைத்துவிடும்.
- பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயாரித்துக் கொள்ளவும் அதனை ஈறுகளின் மீது தடவி இரண்டு நிமிடங்கள் வைத்து கழுவி விடவும் இது வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதும் ஈறுகளில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
- நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும் . இதனை செய்து வந்தால் பல் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது