மண்ணில் இருந்து உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட நாய்
தாய்லாந்தில் சும்பாங் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.அக்குழந்தையை சில நாட்களுக்கு முன் அங்குள்ள வயல்வெளிகளில் குழி தோண்டி புதைத்து விட்டு ஓடிவிட்டார். அப்போது அங்கு நின்று இதை பார்த்து கொண்டிருந்த நாய் வேக வேகமாக ஓடிச்சென்று அக்குழியை தோன்றியது.
பின்னர் அந்த நாயை வேகமாக குரைக்க ஆரம்பித்தது. அதை பார்த்த நாயின் உரிமையாளர் நாயின் அருகில் வந்து பார்த்தபோது குழியில் ஒரு குழந்தையை கால் ஒன்று வெளியே தெரிந்தது.இதை பார்த்த நாயின் உரிமையாளர் அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது எனக்கு பதினைந்து வயது தான் ஆகிறது வீட்டுக்கு தெரியாமல் இருக்கவே இது போன்று செய்தேன் என கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை உயிருடன் மீட்ட நாயின் பெயர் “பிங்போங்”.
நாயின் உரிமையாளர் கூறும்போது, இதற்கு ஒரு கால் செயல்படாது ஒரு விபத்தில் காயமடைந்து 3 கால்களை வைத்து மட்டுமே நடக்கிறது. மேலும் எனக்கு பல விதத்தில் “பிங்போங்” உதவி வருவதாக என அவர் கூறினார்.