நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை!

நாகலாந்து நாட்டில் நாய் இறைச்சி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில், நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திமாப்பூர் சந்தையில் நாய்கள் விற்பனை செய்யப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் தொடர்ச்சியாக அரசு இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளது.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கவிஞருமான பிரிதிஷ் நந்தி, நாய் இறைச்சிக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியிருந்த நிலையில், நாய் இறைச்சியை சாப்பிடுவது மனிதத் தன்மையற்றது. சட்டவிரோதமானது என்றும், இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து, நாகலாந்து பொதுமக்களும், சமூக வலைதளங்கள் மூலமாக முதல்வருக்கு இதேகோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025