உங்கள் குழந்தைக்கு சளி, இருமல் உள்ளதா…? அப்ப இதை செய்து கொடுத்து பாருங்க…!!!
குழந்தைகளுக்கு ஏதாவது உடல் நல குறைவு வந்தால், அது தான் பெற்றோருக்கு பெரிய கவலையே. அதுவும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிற நோய் என்றால் அது சளி இருமல் தான். இதற்க்கு மெடிக்களில் நாம் கண்ட கண்ட சிறப்பையும் வாங்கி கொடுப்பதால், அதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இயற்கையான முறையில் சளி தொல்லையில் இருந்து விடுபட இந்த சாற்றை தயாரித்து கொடுத்து பாருங்க. மூன்றே நாளில் மாற்றத்தை காணலாம்.
தேவையான பொருட்கள் :
- இஞ்சி – சிறிய துண்டு
- துளசி இலை – 10-15 இலைகள்
- தேன் – ஸ்பூன்
- வெந்நீர் – 1 டம்ளர்
செய்முறை :
இஞ்சி சிறிய துண்டு மற்றும் துளசி இலையையும் எடுத்து மிக்சியில் போட்டு சிறிதளவு வெந்நீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின் அந்த சாற்றை வடிக்கட்டியின் உதவியுடன் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாறில் இருந்து 2 ஸ்பூன் அளவு எடுத்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் குழந்தைக்கு 1 ஸ்பூன் அளவு அதிலிருந்து எடுத்து கொடுக்க வேண்டும் இந்த சாற்றை கொடுத்து அரைமணி நேரத்திற்கு தண்ணீரோ அல்லது பாலோ எதுவும் கொடுக்க கூடாது.