தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு நல்ல தண்ணீரில் நன்கு அலசி கொள்ளுங்கள். பின்னர் இந்த அரிசி தண்ணீரில் நன்கு தலையில் தேய்த்து அலசி கொள்ளுங்கள். இது படிப்படியாக முடி உதிர்வை தடுக்கும்.
இரண்டாம் டிப்ஸ்: முடி உதிர்வே இல்லாமல் இருக்க இந்த ஒரு ஹேர் பேக் போதும். அதற்கு முதல்நாள் இரவு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் பச்சை பயிறு, 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். வேறொரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறிய அரிசியை குழைய குழைய வடித்து எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிது கஞ்சியோடு மிக்சியில் சேர்த்து ஏற்கனவே ஊறிய பச்சை பயிறு, வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு தலையில் வேர்க்கால்களில் படும்படி தடவி கொள்ளுங்கள். நுனி முடி வரை இந்த பேஸ்டை தடவி கொள்ளுங்கள். இதனை நன்கு ஊற வைத்து தலையை அலசி கொள்ளுங்கள். இதன் பிறகு உங்களுக்கு முடி உதிர்வு என்பதே இருக்காது. மேலும், முடியும் அடர்த்தியாக வளரும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வரலாம். மேலும் சளி பிடிக்கும் என்றால் விளக்கெண்ணெய்க்கு பதிலாக மற்ற இரண்டு எண்ணெய்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…