கொரோன வைரஸ் இப்படி ஒரு ஆபத்தையும் ஏற்படுத்துமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பற்றிய பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை உலக அளவில், 5,500,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி, கொரோனா வைரஸ் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பையும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மாரடைப்பு, இதயம் செயலிழப்பு, இரத்தம் உரைத்தல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.