தொப்பை உங்களுக்கு தொல்லையா இருக்குதா? இதோ தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

Default Image

தொப்பையை குறைக்க சில வழிமுறைகள்.

இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்  போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தூக்கம் 

ஒரு மனிதனின்  ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. தூக்கம்  குறையும் பட்சத்தில், உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதோடு, உடல் எடை அதிகரிப்பால், பல நோய்கள் நமது உடலில் ஏற்படுவதற்கும் தூக்கமின்மை வழிவகுக்கிறது.

மதுப்பழக்கம் 

இன்று மிக  சிறிய வயதிலேயே பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த பழக்கம் தற்போது பெண்களுக்கும் உள்ளது. மது அருந்துவதால், அடி வயிற்று பகுதியில், கொழுப்புக்கள் சேர்ந்து, உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

பட்டினி 

இன்று பலரும் தங்களது வேலைக்கோ அல்லது மற்ற காரியங்களுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதற்காக, சாப்பிடாமல், வெகுநேரம் பட்டினியாய் இருக்கிறோம். இவ்வாறு பட்டினி கிடைப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதோடு, உடல் எடையும் அதிகரிக்கிறது.

பாஸ்ட்புட் உணவுகள் 

இன்று நாம் நமது கலாச்சார உணவுகளை மறந்து, பாஸ்ட்புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், நமது உடலுக்கு தீமையான பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால், உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமன் அதிகரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்