கோடைகாலத்தில் இரவு ஆடையின்றி தூங்குவதால் பாதிப்பு ஏற்படுமா..? நிபுணர் விளக்கம் ..!
- கோடைகாலத்தில் ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது.
- தூங்கும்போது பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும்.
கோடைகாலத்தில், பொதுவாக வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால், தடிமனான போர்வைகள்,பைஜாமாக்கள் போன்ற ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் தூங்கும் முறைகள் மாறுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே இருக்கும் அதிகபட்ச வெப்பத்தால், நம் உடலின் வெப்பம் உயர்ந்து, தூக்கம் என்பது ஒரு தொலைதூர கனவாக மாறுகிறது.
எனவே, ஆடையின்றி தூங்குவதால், உடலின் வெப்பம் தணிந்து ஒரு நல்ல தூக்கம் கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வது உண்மையில் எந்தவித பலனையும் தராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக வெப்பமான இரவுகளில் ஏன் ஆடையின்றி தூங்கக்கூடாது?
பூபாவின் குரோம்வெல் என்ற மருத்துவமனையின் முன்னணி தூக்க உடலியல் நிபுணர் ஜூலியஸ் பேட்ரிக்,காஸ்மோபாலிட்டன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது, “ஆடையின்றி தூங்குவது ஒருவரின் தூக்கத்தை மிகவும் மோசமாக்கும்” என்று கூறினார். அதாவது, ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
தூங்கும்போது சான்ஸ் போன்ற துணிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும் என்று பேட்ரிக் அறிவுறுத்தியுள்ளார். உடலில் வியர்வை வெளியேறாமல் இருந்தால் உடலின் வெப்பநிலையில் சில மாற்றம் ஏற்பட்டு உடல்நிலையை பாதிக்கும்.
வேகமாக தூங்குவதற்கான வழிமுறை:
உடல் மிகவும் சூடாக இருக்கும்போது தூக்கத்தை பெறுவதற்கு சில எளிய வழிகள் உள்ளன.அதில் வீட்டிற்கு வெளியே வானிலை குளிர்ச்சியாக இருந்தால் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது,மெல்லிய படுக்கை துணியை பயன்படுத்துவது மற்றும் தூங்குவதற்கு முன் குளிப்பது உங்கள் தசைகளை தளர்த்தி உங்களை குளிர்ச்சியாக வைக்கும்.இதனால், உங்களுக்கு வேகமாக தூக்கம் வரும்.
தூங்குவதால் ஏற்படும் பயன்கள் :
இரவில் நன்றாக தூங்குவதால், கிடைக்கும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தவிர, வேறு சில நன்மைகளும் ஏராளமாக கிடைக்கின்றன. அதாவது, நல்ல தூக்கமானது, நமது நினைவு ஆற்றலை அதிகரிக்கும், நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான எடையும் தரும், படைப்பாற்றலைத் தூண்டும். மேலும், கவன கூர்மை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.