கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்த நிகோடின் உதவுமா?! புதிய ஆராய்ச்சியில் பிரான்ஸ்.!
கொரோனா உயிரிழப்புகளை நிகோடின் தடுக்குமா என்கிற கோணத்தில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அரசின் அனுமதிபெற்று ஆராய்ச்சி செய்ய உள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் சிகெரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு செல்லில் உள்ள நிகோடினானது வைரஸை தடுக்குமா என சோதனை செய்ய உள்ளனர்.
இதற்காக பிரான்ஸ் அரசிடம் ஆராய்ச்சியாளர்கள் அனுமதி கேட்டுள்ளனர். உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடனே நோய் எதிர்ப்பு திறன் வெளிப்படும். அது அதிகளவு வெளிப்பட்டால் உயிரிழப்பு ஏற்படும். இதனை நிகோடின் தடுக்குமா என்கிறவாறு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். மற்றபடி, நிகோடின் உடலில், சுவாச பகுதியில் கலந்துவிட்டால் அது உடலுக்கு தீங்குதான் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.