பலாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா…?

Published by
லீனா
  • பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்.

பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது அல்ல. சில ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கக்கூடியது. இப்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. எனவே இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உண்டாகும் நோய் தொற்றுகள் நம்மை அணுகாதவாறு தடுக்கிறது. மேலும் இது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

இரத்தம்

பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுவதால், இது ரத்தம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

கண்

பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக காணப்படுவதால் இது கண் சம்பந்தமான பிரச்சினைகள், அதாவது மாலைக் கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், புரதச்சத்து ஆகிய சத்துக்கள் இப்பழத்தில்  காணப்படுவதால் புற்றுநோய் வருவதையும் தடுக்கும் ஆற்றலை இது உண்டாக்குகிறது.

வயிற்று பிரச்சனை

பலாபழத்தில் நார்ச்சத்து காணப்படுவதால், அல்சர், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

Published by
லீனா

Recent Posts

“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 minutes ago

வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று  வெளியாகியுள்ளது.…

49 minutes ago

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

2 hours ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

2 hours ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

11 hours ago