நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் உடல் நலத்திற்கு கேடு எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நெய்யில் ஒமேகா 3 எனப்படும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் நமது உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க நெய் உதவுகிறதாம்.
பொதுவாக தற்போதைய காலகட்டங்களில் உள்ள ஆண்கள் பெண்கள் இருவருமே தங்கள் உடல் எடையை குறைத்து அழகாக ஒல்லியாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக தங்களது உணவுகளிலும் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்றாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெய் பயன்படுத்தக் கூடாது எனும் கட்டுப்பாட்டையும் தங்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். உபயோகித்தால் உடல் எடை அதிகரிக்கும் என தற்பொழுது வரை கருத்து உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மையில் அது உண்மை கிடையாது. நெய்யில் ஒமேகா 3 மற்றும் அதிகப்படியான டி.ஹெச்.ஏ கண்டறியப்பட்டுள்ளதாம்.
ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்களை நமது உடலால் சொந்தமாக உருவாக்க முடியாது. எனவே இந்த நல்ல கொழுப்பு அமிலத்தை நெய் நமது உடலுக்கு கொடுக்குமாம். மேலும், புற்றுநோய், மாரடைப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள் ஆகியவற்றை தடுக்க நெய்யில் உள்ள சத்துக்களே போதுமாம். நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கூடிய விட்டமின்கள் அதிகம் காணப்படுவதுடன் உடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல் இருப்பவர்கள் தங்கள் உணவில் நெய் பிடிக்காவிட்டாலும் 1 அல்லது 2 துளி சேர்த்து சாப்பிடும்பொழுது மலச்சிக்கல் நீங்குவதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கும் குணம் அளிக்கிறது.
தினமும் நாம் மிக அதிக அளவில் உபயோகிக்கும் பொழுது தான் நமது உடல் பாதிப்படைய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவ்வப்போது அல்லது தினமும் ஒரு ஸ்பூன் என்ற அளவில் நெய்யை எடுத்துக் கொள்வது நல்லதுதான். அதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடலில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பை குறைக்க உதவுவதுடன், நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே நெய் சாப்பிடுவதால் நமது உடல் எடை அதிகரிக்கும் என்ற தவறான கருத்துக்களை அகற்றிடுவோம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது உண்மை எனவே அளவுடன் சாப்பிட்டு பயன் பெறுவோம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…