பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள்.
மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் டயட்டில் இருப்பவர்களுக்கும் உகந்த ஒன்றாக மீன் கருதப்படுகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கூட மீன் சாப்பிடுவதால் உடல் நலம் மிகவும் பேணிக்காக்கப்படுவதாகவும் இருதய நோய்கள் குணமாவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் டயட் மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த மீனில் புரோட்டீன், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ரத்தக் குழாயில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுத்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணம் அடைய செய்கிறது.
மன சோர்வு நீங்க மீன் சாப்பிடுவது மிகவும் உதவிகரமாக அமைகிறது. மேலும் இந்த மீனில் உள்ள ஒமேகா-3 அமிலம் காரணமாக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது. அதிகம் தூக்கம் வரவில்லை என கூறுபவர்கள் காய்கறி சாப்பிடுபவர்களாக தான் இருப்பார்கள், மீன் சாப்பிடுபவர்களை கேட்டுப் பார்த்தால் இரவில் நல்ல தூக்கம் வரும் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் இந்த மீனின் உள்ள விட்டமின் டி சத்து காரணமாக தூக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் முடக்குவாதம் மற்றும் மூட்டுகளில் ஏற்பட்ட நாள்பட்ட வீக்கங்களை போக்க இந்த மீனில் உள்ள சத்துக்கள் காரணியாக உள்ளது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…