மீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? வாருங்கள் அறியலாம்!

Default Image

பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள்.

மீனில் உள்ள நன்மைகள்

மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் டயட்டில் இருப்பவர்களுக்கும் உகந்த ஒன்றாக மீன் கருதப்படுகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கூட மீன் சாப்பிடுவதால் உடல் நலம் மிகவும் பேணிக்காக்கப்படுவதாகவும் இருதய நோய்கள் குணமாவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் டயட் மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த மீனில் புரோட்டீன், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலை ஒல்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ரத்தக் குழாயில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுத்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணம் அடைய செய்கிறது.

மன சோர்வு நீங்க மீன் சாப்பிடுவது மிகவும் உதவிகரமாக அமைகிறது. மேலும் இந்த மீனில் உள்ள ஒமேகா-3 அமிலம் காரணமாக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது. அதிகம் தூக்கம் வரவில்லை என கூறுபவர்கள் காய்கறி சாப்பிடுபவர்களாக தான் இருப்பார்கள், மீன் சாப்பிடுபவர்களை கேட்டுப் பார்த்தால் இரவில் நல்ல தூக்கம் வரும் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் இந்த மீனின் உள்ள விட்டமின் டி சத்து காரணமாக தூக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் முடக்குவாதம் மற்றும் மூட்டுகளில் ஏற்பட்ட நாள்பட்ட வீக்கங்களை போக்க இந்த மீனில் உள்ள சத்துக்கள் காரணியாக உள்ளது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu