முதியவர் தொண்டையில் “பல் செட்” அதிர்ந்து போன மருத்துவர்கள்!
இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரில் உள்ள பிரபல தனியார் பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவமனைக்கு 73 வயது மதிப்பு தக்க முதியவர் ஒருவர் வந்து உள்ளார்.அங்கு உள்ள மருத்துவரிடம் தன்னிடம் உள்ள பிரச்சனைகளை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் ,தனக்கு இருமல் வரும்போது இரத்தமும் வருகிறது.மேலும் மூச்சு விட சிரமமாக உள்ளதாகவும் ,எதையும் விழுங்க முடியவில்லை என கூறினார் .இதை தொடர்ந்து அந்த முதியவருக்கு அனைத்து சோதனைகளும் செய்து பார்த்தனர்.ஆனால் அனைத்தும் சீராக இருப்பதாக கூறினார்.
இறுதியாக அவரது தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.அப்போது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அந்த எக்ஸ்ரேவில் அவரது தொண்டையில் ஒரு பல் செட் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த பெரியவரிடம் விசாரித்த போது தனக்கு 8 நாள்களுக்கு முன் தான் தொண்டையில் அறுவை சிகிக்சை செய்ததாக கூறினார்.அந்த அறுவை சிகிக்சையின் போது தவறுதலாக அவரது பல் செட்டும் வைக்கப்பட்டது தெரியவந்தது.இது தொடர்பாக மருத்துவ நிர்வாகம் விசாரித்து வருகிறது.