இன்று வெளியாகிறது டாக்டர் படத்தின் ‘So Baby’ பாடல்.!
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலுள்ள “So Baby’ என்ற சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள டாக்டர் படத்தின் “So Baby’ என்ற சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.ஏற்கனவே சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த பாடலையும் ஹிட்டாக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
#SoBaby from tomorrow 5PM ♥️
Rockstar @anirudhofficial Musical ????#Doctor@Nelsondilpkumar @priyankaamohan @KVijayKartik @SonyMusicSouth @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios pic.twitter.com/VIafTBtbuy— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 24, 2021