விரைவில் ‘டாக்டர்’ டிரைலர்.! வெளியிட அனுமதி வழங்கிய SK.!
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் வெளியிட அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று டாக்டர்.கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படத்திலிருந்து வெளியான செல்லம்மா, நெஞ்சமே,so baby ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த டாக்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மார்ச் 26-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும் ,அதை சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு வியந்து விட்டதுடன் , இயக்குனர் நெல்சனை பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் டாக்டர் படத்தின் டிரைலரை விரைவில் ரிலீஸ் செய்ய கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதிலிருந்து விரைவில் டாக்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.