இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார்.
வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால், படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது.
படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- பட வாய்ப்பு கொடுக்காததால் மணிரத்னத்தை தூக்கி எறிந்த 2 நடிகர்கள்.!
இது குறித்து சமீபத்தில் பேசிய கெளதம் மேனன் ” வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் முதல் (5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு படத்தை பார்க்க வாருங்கள். எதற்காகவென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…