உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…? அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…!

Published by
லீனா

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள்.

இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

மஞ்சள் பால்

இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் எடையை குறைக்கலாம். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. பாலில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கால்சியம் போன்ற பண்புகள் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தூங்குவதற்கு முன் இதை உட்கொள்ளலாம். உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டை தேநீர் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதுஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. இது இயற்கையாகவே கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த தேநீர் தயாரிக்க, நீங்கள் இரண்டு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், அரை டீஸ்பூன் தேனை கலந்து அருந்தலாம்.

தூங்குவதற்கு முன் இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் பல கிலோ எடையைக் குறைக்கலாம். இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மேட்சா தேநீர்

இந்த தேநீர் ஒரு தனித்துவமான சுவை கொண்டது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. நல்ல தூக்கத்தைப் பெறுவதோடு, எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

வெந்தயம் தேநீர்

வெந்தயத்தில், ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. படுக்கை நேரத்தில் வெந்தயம் தேநீர் அருந்தினால், பசியைக் குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது.

இந்த தேநீர் தயாரிப்பது மிகவும் எளிதானது, இதற்காக நீங்கள் 2 கப் வெந்நீரை எடுத்து அதில் நொறுக்கப்பட்ட வெந்தயம் சேர்க்கவும். கலவையை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க விடவும். பின் சல்லடை வைத்து சளித்து, அதில் சிறிது தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago