கொரோனாவால் உங்கள் காதலியை விட்டு பிரிந்து அவதிபடுறீங்களா?

Default Image

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் இப்பொழுது குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நம் மனஅழுத்தம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் காதலின் இருக்கின்ற உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே கூறலாம்.
நீங்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்கள் துணையுடன் வெளியே செல்ல முடியாது, உங்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது, தனி அறையில் ரொம்ப நாட்களாக இருப்பது உங்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும்.
ஏன் பக்கத்தில் இருக்கும் துணையை கூட இந்த கால கட்டத்தில் நீண்ட தூரத்தில் இருப்பதாக உணர்கின்றனர். இதனால் சில பேர்கள் மன மற்றும் உடல்வியல் ரீதியான ஆபத்துக்களை சந்திப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆனால் தற்போதைய காலத்தில் இந்த நெருக்கம் என்பது இயலாத ஒரு விஷயம்.
முதலில் நீங்கள் மட்டும் தனிமைப்படுத்தலில் இல்லை. நம்மளை போல் ஏராளமான தம்பதிகள் தனிமைப்படுத்தலை எதிர் கொண்டு தான் வருகிறார்கள். இந்த தனிமைப்படுத்துதல் ஒரு கடினமான நேரம் தான், மன அழுத்தத்தை அதிகரிக்கும் காலம் தான். ஆனால் உங்கள் ஒருவரின் தனிமை உங்கள் உறவுகளை காக்கும் என்ற புரிதலை மனதிற்குள் கொள்ள வேண்டும்.
தினம்தோறும் தண்ணீர் ஊற்றினாலே போதும் என்பதை மறந்து விடாதீர்கள். அது போல வாழ்க்கையும் தினமும் உங்கள் அன்பான உறவுகளுடன் தொலைவில் இருந்து உரையாடுங்கள். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் கவனிப்பின் மூலம் அவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அது போதும் உங்கள் மன அழுத்தத்தை விரட்ட உதவும்.
பொதுவாக தூரம் என்பது துணையில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. தம்பதிகள் ஒன்றாக இருந்து நேரம் செலவழிக்கும் போது புரிதலும் அதிகரிக்கும் சண்டை வரத்தும் குறைகிறது. ஆனால் இந்த தனிமைப்படுத்துதல் நேரம் உங்களுக்கு இடையை உள்ள இடைவெளியை மேலும் அதிகமாக்க கூடும். இந்த இடைவெளியை முதலில் இருவரும் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
ஒவ்வொரு நாளும் உங்கள் காதலியடன் அல்லது காதலருடன் பேச மறக்காதீர்கள். தினமும் மொபைல் மூலமாக கால் பண்ணி பேசுங்கள். உங்கள் பேச்சு பெரிதாக இல்லையென்றாலும் அது அவர்களின் நலம் விசாரிப்பாக கூட இருக்கலாம். தூரமாக இருந்தால் கூட உன்னுடன் நான் இருக்கிறேன் என்று அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்