பெண்கள் அடர்த்தியான, நீளமான கூந்தல் இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம் தான். ஆனால் என்ன செய்ய முடியும் சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் குறைவாகத்தான் இருக்கும். எனவே கூந்தல் நீளமாக வளர வேண்டும் என்பதற்காக சிலர் கடைகளில் விலை கூடுதலாக கொடுத்து எண்ணெய்களை வாங்கி உபயோகிக்கிறோம். இந்த எண்ணெய் மூலிகை என நம்பி வாங்கினால் அதிலும் கலப்படம் தான் இருக்கும்.
எனவே, நாம் நினைத்தது போல முடி நீளமாக வளர வேண்டுமானால் நாம் வீட்டிலேயே இயற்கையாக எண்ணெய் தயாரித்து நமது தலையில் உபயோகிக்கலாம். இன்று சில மூலிகைப் பொருட்களை வைத்து எப்படி அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கான எண்ணெய் வீட்டிலேயே தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நன்மைகள் : வெங்காயம் முடி வளர்வதை அதிகரிக்கச் செய்வதுடன் முடி உதிர்வதைத் தடுப்பதற்கு ஒரு நல்ல தீர்வாகும். வெங்காயத்தில் சல்பர் அதிகளவில் உள்ளதால், இது முடியின் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதுடன், முடியின் வழக்கமான pH அளவை பராமரிக்கவும் இது உதவுகிறது. மேலும் இளம் வயதிலேயே நரை முடி வருவதை தடுக்கவும் இந்த வெங்காய எண்ணெய் உதவுகிறது.
செய்முறை : முதலில் வெங்காயத்துடன், கருவேப்பிலையும் எடுத்துக் கொண்டு இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் போல எடுத்துக்கொள்ளவும். பிறகு இந்தப் பேஸ்டை தேங்காய் எண்ணெய் கலவையில் கலந்து அதனை மிதமான தீயில் சூடாக்கவும். 5 முதல் 10 நிமிடங்களுக்கு இவற்றை கொதிக்க விட்டு அதன் பின்பு, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை : தினமும் இரவு தூங்குவதற்கு முன்பதாக இந்த எண்ணெயை தலையில் தடவி விட்டு, காலை எழுந்ததும் தலையை அலசி விட வேண்டும். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
நன்மைகள் : செம்பருத்தி முடி வேகமாக வளர உதவுவதுடன், முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உடைவதை தடுக்க உதவுகிறது.
செய்முறை : செம்பருத்தி பூக்களை மொத்தமாக எடுத்து அவற்றை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை சூடாக்கி நிறம் மாறும் நேரத்தில் இந்த செம்பருத்தி பேஸ்டை கலந்து நன்கு சூடாக்க வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணையை குளிர்வித்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை : இந்த செம்பருத்தி எண்ணெயை உச்சந்தலையில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக நமது தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிர்தலை தடுக்க உதவுகிறது. இதை தடவி ஒரு நாளில் தலையை அலசி விட வேண்டும்.
நன்மைகள் : கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இவை முடியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை அதிகமுள்ளதால், பொடுகு தொல்லையை நீக்க உதவுகிறது. மேலும் முடி உதிர்வைத் தடுக்கவும் இது உதவுகிறது.
செய்முறை : ஒரு கப் தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக சூடாக்க வேண்டும். இவை நன்கு கொதித்ததும் ஆறவைத்து, கறிவேப்பிலையை அகற்றிவிட்டு எண்ணையை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை : இந்த கறிவேப்பிலை எண்ணெயை தினமும் உபயோகிக்கலாம். மேலும் இதை தடவிய உடன் தலையை அலச வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…