உங்களுக்கும் அடர்த்தியான அழகிய கண் இமைகள் வேண்டுமா….? இந்த இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்!

Default Image

முக அழகு என்றாலே அதில் மிகவும் முக்கியமானது கண் தான் என அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அடர்த்தியான கருப்பு நிற கண்களை கொண்டவர்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார்கள். ஆனால், அனைவராலும் விரும்பப்படக்கூடிய இந்த கண்கள் இருக்கக்கூடியவர்கள் மிகச் சிலர் தான்.

பலர் இது போன்று அடர்த்தியான அழகிய கண்ணிமைகள் வேண்டும் என்பதற்காக மஸ்காரா அல்லது கண் மைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கையாகவே உங்களது கண்ணிமைகள் அடர்த்தியாகவும், கருமை நிறமாகவும் மாற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எப்படி அடர்த்தியான கருமை நிற அழகிய கண்ணிமைகளை பெறுவது என்பது குறித்து சில இயற்கை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேங்காய் எண்ணெய்

நன்மைகள் : தேங்காய் எண்ணையை நமது கண் இமைகளில் தடவி வரும் பொழுது கருமையான அழகிய கண் இமைகள் வளர உதவும்.

உபயோகிக்கும் முறை : தேங்காய் எண்ணையை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, கண் இமைகளில் தடவி விட்டு, காலையில் கழுவி விடவும்.

வைட்டமின் ஈ மாத்திரை

நன்மைகள் : வைட்டமின் ஈ மாத்திரை முடி வளர பெரிதும் உதவுகிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் நிச்சயம் அடர்த்தியான கண் இமைகளை பெறலாம்.

உபயோகிக்கும் முறை : வைட்டமின் ஈ மாத்திரையில் இருக்கும் ஜெல்லை இரவு படுக்க செல்லும் முன், விரல்களில் எடுத்து கண் இமைகளில் தடவி விட்டு, காலையில் கழுவவும்.

க்ரீன் டீ

 

நன்மைகள் : க்ரீன் டீ இலைகளை கண் இமைகளில் தடவி வரும் பொழுது அடர்த்தியான கருமை நிறமுள்ள முடிகள் வளர உதவும்.

உபயோகிக்கும் முறை : ஒரு தேக்கரண்டி க்ரீன் டீ இலைகளை அரை கப் வெந்நீரில் சேர்த்து, கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். பின் இந்த சாற்றை குளிர வைத்து பஞ்சுகளில் தொட்டு இரவில் பூசி வரவும்.

ஆலிவ் எண்ணெய்

நன்மைகள் : ஆலிவ் எண்ணெய் கண் இமை அடர்த்தியாக வளர பெரிதும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகிய இரண்டையும் சேர்த்து, இரவில் தூங்குவதற்கு முன் கண் இமைகளில் பூச வேண்டும். இந்த எண்ணெய்களை தனி தனியாகவும் பூசலாம்.

ஷியா வெண்ணெய்

நன்மைகள் : ஷியா வெண்ணெய் அதிகளவு கொழுப்பு அமிலங்களை கொண்டது, இது முடிகளை வளர வைப்பதில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

உபயோகிக்கும் முறை : கையில் ஷியா வெண்ணையை எடுத்து லேசாக பிசைந்து விட்டு, கண் இமைகளில் பூசி விடவும், காலையில் குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

இது போன்ற இயற்கையான வழிமுறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செயற்கையான அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்