முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துபவர்களா நீங்கள்…? இதை தெரிந்து கொள்ளுங்கள்!
தற்போதைய நவீன காலகட்டத்தில் எல்லா வீடுகளிலுமே பெரும்பாலும் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டிகள் எதற்கு உபயோகிக்க வேண்டும் என்று தெரியாமலேயே பலர் உபயோகிக்கின்றனர். எதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாதோ அதையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம்.
அதிலும் சில பொருட்கள் வெளியில் இருந்தால் கெட்டுப் போய்விடும் என்பதற்காக அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. மேலும் சிலர் முட்டைகளை கடையில் இருந்து வாங்கி வந்த உடனே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். இதனால் சில பின்விளைவுகளும் உடலுக்கு நோய்களும் ஏற்படும். அவை என்ன என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குளிர் சாதன பெட்டியில் வைக்கப்படும் முட்டைகள்….
பெரும்பாலும் குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைத்து நாம் உபயோகப்படுத்தும் பொழுது அதன் வெப்ப நிலையில் மாற்றம் உண்டாகும் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். கோழி முட்டையிடும் பொழுதே அதன் ஓடுகளில் சால்மோனெல்லா எனும் பாக்டீரியா உருவாகியிருக்கும். இந்த முட்டைகளை நாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது அந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்கு தேவையான வெப்பநிலையை குளிசாதன பெட்டி கொடுக்கும். ஆனால் நாம் அதை அறியாமல் சாப்பிட்டு விடுகிறோம்.
இந்த முட்டைகளை நம் சாப்பிடும் பொழுது நமது உடலில் தேவையற்ற நோய்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதே போல குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வேக வைக்கக் கூடிய முட்டைகள் விரைவில் உடைந்து விடும். ஆனால் வெளியிலுள்ள முட்டைகளை வேக வைக்கும் பொழுது அவ்வளவு சீக்கிரத்தில் உடைந்து விடாது.
இருப்பினும், அதிகம் வெப்பமுள்ள சமயங்களில் உடனடியாக முட்டை கெட்டு விடாமல் இருப்பதற்கு குளிர்சாதனப்பிட்டியில் முட்டைகளை வைப்பது வழக்கம் தான். ஆனால், ஏற்கனவே பாக்டீரியாக்களால் உள்ள முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு வெளியே எடுத்து நீண்ட நேரம் வைத்து விட்டு சாப்பிடுவதும் முட்டை ஒரேடியாக கெட்டுப் போவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். எனவே இது குறித்த விழிப்புணர்வுடன் நாம் செயல்படுவது நல்லது.