வாழ்க்கையில சந்தோசமே இல்லனு நினைக்கிறீங்களா..? உங்களுக்கு தான் இந்த பதிவு…!
நமது வாழ்வில் சந்தோசமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
அன்று குடிசை வீட்டில், ஒரு பிடி கஞ்சியை குடித்து வாழ்ந்த நமது முன்னோர்கள் மிகவும் சந்தோசமாக, ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று மாட மாளிகையில், நல்ல பண வசதியோடு வாழ்பவர்களுக்கு நிம்மதி, சந்தோசம் என்றால் என்னவென்று தெரியாமல் போய் விட்டது. அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த பதிவு.
இணையம்
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே சுற்றுலா தளம் சமூக வலைத்தளம் தான். நமது இணைய பயன்பாடு நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து நமது வாழ்வை மாற்றி அமைக்கிறது. இதில் நன்மை, தீமை இரண்டும் உள்ளது. நன்மையான வழியை தேடு போது, அதன் மூலம் நமக்கு பல நேர்மறையான கருத்துக்கள் கிடைக்கும். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது, நமது வாழ்க்கையில், சந்தோசத்தை அனுபவிக்க முடியும். எனவே நீங்கள், எதை கேட்குறீர்கள், எதை பார்க்கிறீர்கள், எதை கவனிக்கிறீகள் என்பது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது நமது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். உடலுக்கும், மனதிற்கும் பாலா வகையில் சம்மந்தம் உண்டு. உங்களது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உங்களது மனநிலையும் ஆரோக்கியமாக காணப்படும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
வழிபாடு
பொதுவாக நமது வாழ்வில் ஆன்மீக நம்பிக்கை இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது, நமக்கென்று உதவ ஒரு கடவுள் உள்ளார். எனவே, மனக்குழப்பமான நேரங்களில் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது, நமக்கு ஆறுதல் அளிக்கும்.
நேர்மறை எண்ணங்கள்
ஓரு மனிதனை செதுக்குவது நேரரையான எண்ணங்கள். என்றைக்குமே நமது வாயில் இருந்து வராகி கூடிய வார்த்தைகள் நேர்மறையானதாக இருக்க வேண்டும். இவை தான் நம்மை சந்தோசமாக வைத்துக் கொள்ள சிறந்த வழி.