ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அந்த வகையில் மாதம் 8-ம் தேதி என்றால் நம் அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது உலக மகளிர் தினம்.மார்ச் மாதத்தில் பல முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வரும்.
ஆனால் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நம்முடைய நினைவிருக்கு முதலில் வருவதில்லை ஏனென்றால் நம் குடும்பத்தில் கண்டிப்பாக ஒரு பெண்கள் இருப்பார்கள் அதனால் உலக மகளிர் தினம் நம் நினைவிற்கு வருகிறது.
இந்த நாள் ஆண்கள் ஆதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள். சில வருடங்களுக்கு முன் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என கூறி பெண்களை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார்.இதனால் ஆண்கள் மட்டுமே வேலைக்கு சென்று வந்தார்கள்.பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள்.
பின்னர் காலம் செல்ல செல்ல ஆண்களை விட பெண்கள் முதலில் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கு இணையான வேலைகளை செய்ய தொடங்கினார்கள். ஆனால் தற்போது அனைத்து துறைகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக சாதனை செய்து வருகிறார்கள்.
இப்படி பல சாதனை செய்து வரும் பெண்களுக்கு நம் சமுதாயத்தில் முழுசுந்திரம் கிடைத்துஉள்ளதா..? என்ற கேள்வியை எழுப்பினால் இன்னும் முழு சுகந்திரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் தற்போது உள்ள பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் சென்று வருகிறார்கள் .அவர்கள் செய்யும் வேலை கண்டிப்பாக ஆண்களுக்கு இணையாக இருக்கும் ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் வேலைக்கு சென்ற விட்டு வீடு திரும்பும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்கிறீர்கள்.
இதற்கு பெயர் பெண்கள் முழுசுகந்திரமா..? ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு பெண் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நவீன உலகத்தில் இன்னும் பாதுகாப்பு இல்லை . “பெண்கள் நம் நாட்டின் கண்கள்” என கூறுகிறோம். அப்படிப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் அது அதற்கு பெயர் முன்னேற்றம் கிடையாது.
ஆண்களுக்கு நிகரான சுதந்திரம் பெண்களுக்கு கிடைத்தால் தான் பெண்களுக்கான முழு சுதந்திரம். வருகின்ற 08 -ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.எனவே அனைத்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு தினசுவடு சார்பாக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…