முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா…? இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்…!

Default Image

ஆண்கள், பெண்கள் இருவருமே அடர்த்தியான அழகிய முடி இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் தங்களுக்கு முடி  தான் அழகு என நினைப்பார்கள். எனவே தங்களுக்கு அடர்த்தியான, நீளமான முடி வேண்டும் என விரும்புவார்கள். ஆசைப்படும் அனைவருக்கும் அவ்வாறு அழகிய முடி அமைந்து விடுவதில்லை.

காற்று மாசுபாடு மற்றும் சரியான கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி வளர்வது நின்று விடுவது மட்டுமல்லாமல் பலருக்கு முடி உதிரவும் தொடங்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் கவலைப்படுபவர்களா நீங்கள்?

இதை சரி செய்ய சில குறிப்புகளை அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் முடி அடர்த்தியாக நீளமாக வளர்வதை கண்கூடாக பார்க்க முடியும், அறியலாம் வாருங்கள்.

ஒழுங்கமைத்தல்

நமது தலைமுடி அதிகளவு சூரிய ஒளி மற்றும் தூசு காரணமாக வளர்வது நின்று விடுகிறது. இந்நிலையில் நாம் தலை முடியை அடிக்கடி இல்லாவிட்டாலும், மாதம் ஒரு முறையாவது முடியின் நுனியில் லேசாக வெட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன், முடி உதிர்வும் நின்று விடும்.

கண்டிஷனிங்

முடியின் முனைகள் மெல்லியதாகவும் இரண்டாகப் பிளவுபட்டு இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். இவ்வாறு இருப்பதற்கு காரணம் சரியான ஊட்டச்சத்து முடியின் கீழ்ப்பகுதிக்கு கிடைக்காதது தான். நீங்கள் பார்க்கும் போதே தெரியும் முடியின் வேர்ப்பகுதியை விட, முடியின்  கீழ்ப்பகுதி அதாவது நுனிப்பகுதி மிகுந்த சேதம் அடைந்ததாக இருக்கும். எனவே தலையை அலசிய பின்னர் முடியின் கீழ்ப்பகுதியில் கண்டிஷனிங் செய்யும்பொழுது முடி சேதம் அடைவது தவிர்க்கப்படுவதுடன் ஆரோக்கியமான முடி வளர்வதற்கும் இது உதவுகிறது.

முடி கீழ்பகுதியில் சேதம் அடைந்திருந்தால் என்ன? மேலிருந்து தானே தலை முடி வளரும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கீழ் பகுதி சேதமடைந்து பிளவு ஏற்பட்டிருக்கும் போது அப்படியே மீண்டும் மீண்டும் பிளவுபட்டு மேலே சென்று கொண்டே இருக்கும். முடி வளர முடியாது. எனவே தினமும் கண்டிஷனிங் செய்வது முடி வளர மிகவும் உதவும்.

 

எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெயை கொண்டு அழுத்தம் கொடுத்து வாரம் ஒரு முறையாவது தலை முடியை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் மசாஜ் செய்து வரும் பொழுது நமது தலைமுடி ஆரோக்கியமாக வளரும். முடி உதிர்வதும் குறைகிறது. இவ்வாறு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

hair oil

தலை வாருதல்

தினமும் முடி அதிகளவில் உதிர்பவர்கள் கூட, தலையை தொடர்ச்சியாக வாரி வர வேண்டும். இவ்வாறு செய்வது மேலும் முடி உதிர்வதை குறைக்கிறது. மேலும் நாம் பயன்படுத்தக்கூடிய தலை வாரி சிறிய பற்களை கொண்டதாக இருக்கக் கூடாது. இது முடிகளை மேலும் சேதம் அடைய செய்கிறது. எனவே அதிக இடை வெளிகள் கொண்ட தடிமனான சீப்பு வைத்து தலை வாரும் போது தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது முடி உடைவையும் தவிர்க்கும்.

 

 

முடி பின்னல்

தினமும் தூங்குவதற்கு முன்னதாக நன்றாக தலையை வாரி பின்ன வேண்டும். இவ்வாறு பின்னும் பொழுது முடி சேதமடைவது தவிர்க்கப்படுவதுடன், முடி நன்றாக வளரவும் இது உதவுகிறது.

hair

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்