கண் பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா…? ஆரோக்கியமான கண்களுக்கான சில இயற்கை குறிப்புகள் இதோ…!

Default Image

கண் மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. அனைவரும் கண்களை பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் வயது முதிர்வின் காரணமாக அல்லது எதிர்பாராத நிகழ்வு காரணமாக கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் வலி, கண்களில் வீக்கம் ஆகியவை ஏற்படுவது பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். அதற்காக நாம் கடைகளில் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பது கண்களுக்கு நல்லது கிடையாது. எனவே இயற்கையான சில வழிமுறைகளை பயன்படுத்தி கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கண் பார்வை

கண் பார்வை தெளிவடைவதற்கு முருங்கை கீரை மற்றும் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து சமைத்து, அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் செண்பகப் பூவை கசாயம் தயாரித்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து அருந்தி வரும் பொழுது மங்கலான கண் பார்வை தெளிவடையும்.

அதுமட்டுமல்லாமல் பாதாம் பருப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நன்றாக பொடி செய்து அந்த பொடியை தினமும் சிறிதளவு சாப்பிட்டு தண்ணீர் குடித்து வரும்போது கண்பார்வை தெளிவடையும்.

செவ்வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.

அது மட்டுமல்லாமல் பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு நல்லது. பச்சையாகவோ அல்லது சமைத்தோ தொடர்ந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெரும்.

கண் எரிச்சல்

கண் எரிச்சல் உள்ளவர்கள் நந்தியாவட்டை பூவை வைத்து கண்களில் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.

மேலும், தினமும் அரைக்கீரை சாப்பிடுவதாலும் கண்கள் குளிர்ச்சியடைந்து கண் எரிச்சல் குணமாகும்.

புளியங்கொட்டை தூளை பசும்பாலில் கலந்து குடித்தாலும் கண் எரிச்சல் குணமாகும்.

கோவ இலையின் கசாயத்தை தொடர்ந்து குடித்து வந்தாலும் கண் எரிச்சலில் இருந்து குணமடையலாம்.

வில்வ இலைகளை சட்டியில் போட்டு நன்றாக வதக்கி தூங்குவதற்கு முன்பதாக கண் இமைகளின் மேல் வைத்து கட்டிவிட வேண்டும். காலையில் அவிழ்த்து விடலாம். இதனாலும் கண் எரிச்சல் குணமாகும்.

நாவற்பழம் சாப்பிடுவதாலும் கண் எரிச்சல் குணமடையும்.

சிவந்த கண்கள்

கருவேலம் கொழுந்தை பசும்பால் சேர்த்து நன்றாக அரைத்து கண் இமைகளின் மேல் தடவி வரும் பொழுது சிவந்த கண்கள் மாறும்.

நெல்லிக்காய் சாறு எடுத்து குடித்து வர கண் சிவந்த நிறம் மாறும்.

 ஓமம், வெந்தயம் மற்றும் மிளகு சேர்த்து நல்லெண்ணையுடன் கலந்து அரைத்து தலையில் தேய்த்து வர சிவந்த கண்கள் மாறும்.

கருவேப்பில்லை பழங்களை சாப்பிட்டாலும் சிவந்த கண்கள் மாறும்.

கண் கட்டி

கண்களின் மேல் புறம் சோற்று கற்றாழை ஜெல்லை தடவி வர கட்டிகள் மறையும்.

வாகை மரத்தின் விதைகளை உரசி கண்ணின் மேற்புறம் பூசி வர கண்கட்டி மறையும்.

கண்கட்டியால் அவதிப்படுபவர்கள் குளிர்ச்சி தர கூடிய கேரட், பொன்னாங்கண்ணி, திராட்சை, பப்பாளி, இளநீர் ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்