செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா …? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Default Image

தற்போதைய நவீன காலகட்டத்தில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது செரிமான கோளாறு. இந்த செரிமான பிரச்சனை ஏற்படும் பொழுது வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல சிரமமான அறிகுறிகளை பலரும் அனுபவித்து வருகின்றனர்.

அந்த வகையில் செரிமான பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது? நாம் சில  செயல்களை தவறான முறையில் செய்யும் பொழுது இந்த செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது உணவும், வாழ்க்கை முறையும் தான்.

சில சமயங்களில் நாம் அறியாமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகள் நமது செரிமான அமைப்பை பெருமளவில் பாதித்து விடுகிறது. செரிமானம் பாதிப்பு ஏற்படுவதற்கான சில காரணங்கள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

உணவுக்குப் பின் குளியல்

மருத்துவர்களின் கருத்துப்படி ஒவ்வொரு நபரும் உணவுக்கு பின் மற்றும் முன் செய்யக்கூடிய செயல்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் நாம் தவறாக நடந்து கொள்ளும் பொழுது நமது உள்ளுறுப்புகளில் சில பாதிப்புகள் ஏற்படலாம். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் குளிக்கக் கூடாது என கூறப்படுகிறது.

bath

நமது உணவை ஜீரணிக்க கூடிய உறுப்புகள் உஷ்ணம் உள்ளதாக இருக்குமாம். எனவே, அவை சாப்பிட்ட பின்பு தானாகவே செயல்படுமாம். ஆனால் நம் சாப்பிட்ட உடன் குளிக்கும் பொழுது, நமது உடலின் வெப்பநிலை குறைவதால் செரிமான அமைப்பும் மெதுவாக செயல்பட்டு செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

வேகமான நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது ஒரு நல்ல உடற்பயிற்சி என்று அனைவருமே அறிந்தது தான். ஆனால் சாப்பிட்டவுடன் வேகமாக நடப்பது நமது செரிமானத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது சாப்பிட்ட பின்பதாக நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வதோ, நீச்சல் பயிற்சிகள் மேற்கொள்வதோ நமது செரிமான அமைப்பை பாதிக்கும் என கூறப்படுகிறது. எனவே சாப்பிட்டு சில மணி நேரங்களுக்கு வேகமான நடைபயிற்சி எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறப்படுகிறது.

இரவில் தயிர் சாப்பிடுதல்

curd

உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஒரு உணவு. ஆனால், தயிரை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இது தொடர்பாக கூறும் மருத்துவர்கள் தயிர் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உள்ளதால் இவை உடலில் பித்தம் மற்றும் வாத தோஷத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது நமது செரிமான மண்டலத்தை பாதித்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi