உங்கள் வீட்டில் அடிக்கடி சாதம் மீதமாகி கீழே கொட்டுகிறீர்களா… ? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!
மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாக நாம் நமது வீடுகளில் தினமும் சாதம் சமைப்பதுண்டு. அந்த சாதம் சில நேரங்களில் மீதமாகி விடுவது வழக்கம் தான். கடையில் விலை கொடுத்து வாங்கும் அரிசியை, சமைத்து வீணாக கொட்டுவது நல்லதல்ல. தற்போது இந்த பதிவில், அப்படி மீதமாகும் சாதத்தை வைத்து சூப்பரான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சாதம் – 2 கப்
- உருளை கிழங்கு (அவித்தது) – 3
- பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1
- கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிளை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- மிளகாய் தூள் – காரத்திற்கேற்றவாறு
- கரம் மசாலா – அரை ஸ்பூன்
- இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சோறு எடுத்து, அதோடு 3 உருளை கிழங்குகளை சேர்த்து பிசைந்து, பின் அதோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்காளையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை சதுரமாக தட்டி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதனுள் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால், இனிமே உங்களது வீட்டில் சாதம் மீதமாக இருக்காது.