நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையில்லை என்று ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கமளித்துள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் , சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ,அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது . தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங்,நான் நடிகரை காதலிப்பதாக வெளிவந்த தகவல் வதந்தி என்றும்,எனக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் நான் தனியாகவே வசித்து வருவதாகவும் ,எனது திருமணம் எப்போது நடந்தாலும் திருவிழா போன்று கொண்டாடப்படும் என்று கூறி அவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.இதிலிருந்து இவர் காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது .
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…