குழந்தையின் கழுத்து நிற்காததற்கு காரணம் என்ன தெரியுமா…?

Default Image

குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம். இந்த குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதை தான் அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். குழந்தைகளுக்கு எதுவும் உடல்நல குறைவு ஏற்பட்டால், பெற்றோர்களுக்கு அது வருத்தமாக இருக்கும். குழந்தைகள் அந்தந்த பருவத்தில், அந்த பருவத்திற்கு ஏற்ற வளர்ச்சி அடைய வேண்டும்.

கழுத்து நிற்காததற்கு காரணம் என்ன ?

Image result for குழந்தையின் கழுத்து நிற்காததற்கு காரணம்

பிறந்த குழந்தை பிறந்து, 4 மாதம் அல்லது 5 மாதத்தில் கழுத்து நிற்க வேண்டும். கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் காதுகளின் பின்னாலிருந்து கழுத்து எலும்பு வரை நீளமான தசை இருக்கும். இதற்கு எஸ்.சி.எம் அல்லது Sternocleidomastoid என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த பிரச்னை வந்தால் ஒரு பக்க தசை சிறியதாகிவிடும்.

சிசேரியன் பேபி :

Image result for சிசேரியன் பேபி :

 

குழந்தை வயிற்றில் இருந்தபோது குறுக்கி கொண்டிருந்தாலோ அல்லது தாயின் வயிற்றுக்குள் அசாதாரண நிலையில் இருந்தாலோ இந்த பிரச்சனை வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தையை ஆயுதம் போட்டு வெளியில் எடுத்திருந்தாலும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு.

குறைவுகள் :

Image result for குழந்தையின் இயல்பான வளர்ச்சி

குழந்தைக்கு தன் கழுத்தில் பேலன்ஸ் இல்லாமல் போகும். பார்வையில் பிரச்சனைகள் ஏற்படும். நடப்பது, உட்கார்வது என குழந்தையின் இயல்பான வளர்ச்சிகளில் தாமதம் ஏற்படும். வளைந்த நிலையில் தவழும். ஒரு பக்கமாக உருளும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிகிச்சை :

Image result for குழந்தைகளுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

குழந்தைக்கு பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டால் குழந்தைகளுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் ஆரம்பிப்பார்கள். இது 6 மாதங்களில் குழந்தையிடம் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

வேறு வழிகள்: 

Image result for குழந்தைக்கு பசி ஏற்படும்போது பால் பாட்டிலை காட்டி

 

குழந்தைக்கு பசி ஏற்படும்போது பால் பாட்டிலை காட்டி அந்த திசையில் கழுத்தை திருப்ப வைக்க முயற்சிக்கலாம் மற்றும் லைட்டும், சத்தமும் உள்ள பொம்மைகளை வைத்து அது எழுப்பும் வெளிச்சம் மற்றும் சத்தம் பக்கம் திரும்ப வைக்க முயற்சிக்கலாம்.

மேலும், கையையும் காலையும் சேர்த்து வைத்து விளையாடுவதை அனுமதியுங்கள். இப்படி விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்த இயலும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்