வலிமை திரைப்படத்தின் எடிட்டர் யார் தெரியுமா..?
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் டிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் எடிட்டராக வேலு குட்டி பணியாற்றவுள்ளார். இவர் யாற்கனவே ஜாக்பார்ட், சங்கு சக்ரம் ஆகிய படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று முதல் படத்திற்கான எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வலிமை படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான டைட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் போஸ்டர் என ஒன்றுகூட வெளியவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் கேட்டு வந்தார்கள். அதற்கு பிறகு நடிகர் அஜித் சரியான நேரத்தில் அப்டேட் கொடுக்கப்படும் என்று அறிக்கை மூலம் தெரிவித்தார். மேலும் போனிகபூர் விரைவில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் என்று கூறியிருந்தார் இதனால் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.