செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா.??

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் நடிக்க இருந்ததாக தகவல்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செக்க சிவந்த வானம். இந்த அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதி ராவ், பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த திருப்பிடம் விமசர்ன ரீதியாவும், வசூல் ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில், சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அதாவது இந்த திரைப்படத்தில், சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன் பிறகு கால்ஷீட் காரணமாக இருவராலும் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.