பீஸ்ட் படத்தில் செல்வராகவனுக்கு பதில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோலமாவு கோகிலா படம் மூலம் புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் செல்வராகவனுக்கு பதில் முதலில் யார் நடிக்க இருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, செல்வராகவன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் மிஷ்கின் தான் நடிக்க இருந்தாராம். பின்னர் கால்ஷீட் காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போகவே அடுத்து செல்வராகவன் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. தற்போது, படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் சென்னையில் எடுக்கப்படவேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு ரஷ்யா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…