மைனா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??
மைனா படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் சார்லிதான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மைனா. இந்த திரைப்படத்தில் விதார்த், அமலாபால், தம்பி ராமையா, பாஸ்கர், போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். சிறந்த காதல் கதையை மையமாக வைத்து எடுக்கபட்ட இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் தம்பி ராமையா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் தம்பி ராமையா நடித்த ராம்யா கதாபாத்திரத்தில் நடிகர் சார்லி தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் சில காரணங்களால் நடிகர் சார்லி நடிக்க முடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.