தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?
தங்க மீன்கள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்க மீன்கள். இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மகளாக சாதனா என்பவர் நடித்திருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.
தந்தை மகள் பாச கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ராம் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கருணாஸ் தானாம். ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனது என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.