நாயகன் படத்தில் கமலின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார். கடந்த 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து பிரமாண்ட வெற்றியை எட்டிய திரைப்படம் நாயகன். இதில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திலுள்ள கமல் நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி இளையராஜாவின் இனிமையான இசையில் வெளியான தென்பாண்டி சீமையிலே பாடலும் அனைவரின் பேவரட்டாக மாறியது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கமலுக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது சத்யராஜ் என்று அறிய வந்துள்ளது. ஆம் இயக்குநர் மணிரத்தினம் இந்த படத்தின் கதையை முதலில் சத்யராஜ் அவர்களிடம் தான் கூறியுள்ளார். அதனையடுத்து ஒரு சில காரணங்களால் சத்யராஜ் அவர்கள் நாயகன் படத்தில் நடக்கவில்லையாம்.