சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?
நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி ரெட்டி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு, கே. ஜி. மோகன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர்கள் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் முதன் முதலாக சசிகுமார் இந்த படத்தில் நடிகர் ஜெயின் அழகர் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாண்டியராஜன் மகன் பிரதீப்பும், சசிகுமார் கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு ஆகிய இருவரும் தான் நடிக்கவிருந்தார்களாம் சில காரணங்களால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.